Tamil News

    Home Tamil News
    Tamil News தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

    10 வயது மாணவி வன்புணர்வு – 59 வயதான பாடசாலை பிரதி அதிபர் கைது!

    தரம் 5 மாணவியை வன்புணர்விற்குள்ளாக்கிய பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி பாடசாலையில் வைத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையின் விளக்கமறியலில் உள்ள 59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

    ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்

    இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார். ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அன்று மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். எனினும், இந்த ஆறு குழந்தைகளுக்கும் […]

    யாழில் காதலி அனுப்பிய குறுஞ்செய்தியால் பீதியடைந்து இளைஞன் தற்கொலை

    தன்னை திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக காதலி அனுப்பிய குறுந்தகவலால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் இளைஞரின் தந்தை கண்டித்துள்ளார். பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என மகனை கண்டித்ததுடன், வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார். அது காதலிக்கு பிடிக்கவில்லை. தன்னை தவிர்த்து விட இப்படி நாடகம் ஆடுகிறார்கள் என சந்தேகித்தார். இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்கு தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார். இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்

    பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ […]

    கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை

    எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர் இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.