obituary news

Home obituary news
obituary news தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் நீண்ட கால செயற்பாட்டாளராகவும் தேசிய செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழுக்கும் தமிழ்க் கலைக்குமாக காலநேரம் பாராது பணிசெய்த தேசிய செயற்பாட்டாளன் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் இன்று (22.09.2023) மீள முடியாத துயிலடைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். புலம்பெயர்வாழ் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழி, தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்காக பணிசெய்த அற்புதமான செயற்பாட்டாளனை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் இன்று இழந்து நிற்கிறது. அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வளர்ச்சிக்கு அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பெரியவை. அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்களுடைய ஆத்மா அமைதியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. நாகராஜா விஐயகுமார் தேர்வுப்பொறுப்பாளர் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86) உயிரிழந்துள்ளார். தனது இரண்டாவது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று (14.09.2023) காலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிக்கிரியை இந்த நிலையில் அவரின் உடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்ணா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டு கேணியடி கொக்குவில் மேற்கில் உள்ள இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பகல் 11 மணியளவில் வேலணையில் […]

யாழில் மீட்டர் வட்டிக்காரர்களால் தவறான முடிவை எடுத்த இளம் தாய்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (04-09-2023) இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயாரான யாழ் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 34 வயதான ஜெயராஜா அருள்பாலினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மீட்டர் வட்டிக்கு பலரிடம் பணம் பெற்று பறவை விற்பனைத் தொழிலை செய்து வந்துள்ளதாகவும், கடனை திரும்ப செலுத்த தவறிய நிலையில் அவர்களினால் வீடு, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், வான் என்பன பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. வட்டிக்காரர்களின் கொடுமையால் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையிலும் மீட்டர் வட்டிக்காரரின் அடாவடி அதிகரித்துள்ளது. இவ்வாறான அடாவடித்தனத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது எனவும் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கணவனிடம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பொருட்படுத்தாத கணவன் வெளியில் சென்று விட்டு […]

விபத்தில் காயம் அடைந்த அதிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு.

கடந்த ஜுன் மாதம் 11 ம் திகதி தம்புள்ளை கெக்கிராவா பிரதான வீதியின் சிறப்பன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் , காயங்களுக்கு உள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிபர் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்விளான் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான இராசேந்திரன் நிக்சன் வயது 48 என பொலிசார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விட்டு மல்லாவி திரும்பிக் கொண்டிருந்த வாகனம், வீதி ஓரம் நின்றிருந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று இருந்தது. இந்த சம்பவத்தில் அதிபர் தலைமையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக […]

மரண அறிவித்தல் – அமரர் புவனேஸ்வரி

மத்தித்தரை நவிண்டிலை பிறப்பிடமாகவும் வதிவிடவும் கொண்ட முன்னைநாள் நவிண்டில் பிரதேச நிர்வாக சபை உறுப்பினர் நித்தியானந்தம் அவர்களின் பாசமிகு மனைவி அமரர் புவனேஸ்வரி அவர்கள் இறைவனின் விருப்பத்தின் பேரில் இறைபதம் அடைந்து விட்டார். அன்னாரின்...