battinews

Home battinews
battinews தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

பொலிஸாருடன் குழப்பத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்

புத்தர் சிலையை தான் பார்க்க வேண்டுமெனவும் அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த புத்தர் சிலை அங்கு இல்லையென செய்திகள் வெளியிாகி இருந்த நிலையில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் குறித்த இடத்திற்கு இன்று சென்றுள்ளார். ஆனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்பட்டதால் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பகுதிக்கு செல்வதற்கு அம்பிட்டிய சுமணரத்தன தேரருக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையிலேயே அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புத்தர் சிலையை நான் பார்க்க வேண்டும். அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டும் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]

கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் இன்று (19-10-2023) காலை இடம்பெற்றுள்ளது. கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மட்டக்களப்பு போரதீவுப்பற்று திருப்பழுகாமம் கிராமத்தை பூர்விகமாக கொண்டதுடன் கண்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரித முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளம் யுவதியின் விபரீத முடிவு!

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச் சேர்ந்த (21) வயதுடைய கணேசகுமார் அனோஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். கடந்த நான்கு வருடமாக மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரை காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து தனது பணியினை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் தனிமையில் இருந்ததாகவும் பின்னர் வீட்டின் அறையினுள் உட்சென்று தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டதனை கண்ட தாயார் தூக்கில் இருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா […]

முருங்கை காய் பறித்தவரிற்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாய் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 82 வயதான இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் […]

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (11) அதிகாலையில் உயிரிழந்துள்ளார். மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபபொலிஸ் பரிசோதகர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து, அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரியை பொலிஸாரின் மரியாதையுடன் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.