mannar news

Home mannar news
mannar news தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தல் உடன் தொடர்பு பட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

மன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குளிக்க சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு தீர்வை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனைக்காக கொழும்பு மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த நிலையிலேயே உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபர் என்பதுடன், சந்தேக நபரிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தியுள்ளனர். மேற்படி சந்தேகநபரிடமிருந்து 2900 சிகிரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சிக்கிய 3 கோடி பெறுமதியான கொக்கைன் போதை பொருள்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான கொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபாலவின் பணிபுரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசணையின் பெயரில் உப பொலிஸ் பரிசோதகர் J.T.U ஜேவர்தன தலைமையிலான குழுவினரான குணசிங்க (75927), அசங்க (66638), பொலிஸ் கான்ஸ்டபில்களான விமுர்த்தி (83790), திஸனாயக்க (90465) சுகிர்தரன் (25227), கருணா சிங்க (37662), அபக கோன்(35399), பிரேம ரெட்ன (37882) ஆகிய 9 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்தப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நபர் […]

தலைமன்னாரில் மாயமான இரு கடற்றொழிலாளர்கள்!! தேடிச்சென்றவர்கள் அந்தரிப்பு!

தலைமன்னாரில் கடற்றொழிலுக்கு சென்ற இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். தலைமன்னாரில் கடற்றொழிலுக்காக படகு ஒன்றில் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் கடற்றொழிலாளர்கள் குறித்த கடற்றொழிலாளர்களை தேடி வருகின்றனர். கடந்த (12.09.2023)செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராம கடற்கரையிலிருந்து வட கடலில் இரு கடற்றொழிலாளர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். எனினும் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இருவரையும் சக கடற்றொழிலாளர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன இரு கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த இருவரும் நேற்று மாலை வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடற்றொழிலாளர்களை தேடிச் சென்ற படகுகளில் […]