video news

Home video news
video news தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோப் பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம் என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ? மனிதரா மிருகமா பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யார் இந்த தைரியத்தை வழங்கியது ?? பொதுமக்கள் சொல்வது கேட்கவில்லையானால் அடிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது ? இப்போது நடைபெற்ற செயற்பாடு உடனடி நடவடிக்கைக்காக ( மருத்துவபீட மாணவி தொலைபேசியில் வீடியோ எடுத்த போது அந்த பாதுகாப்பு பிரிவினரால் தொலைபேசி பறிக்கப்பட்டது ) போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது உறவுக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது தாக்குதலுக்குள்ளாக மனிதனுக்கு நியாயம் கிடைக்குமா?? யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீண்டும் ஒரு தடவை ஊழியர்கள் தொலைபேசி பாவிக்க தடை என அறிக்கை விட்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்வார் தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிசாரிம் முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு […]

விடுதலை புலிகளை கொடூரமான பாசிச அமைப்பு என விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் – வீடியோ

காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் தமிழீழ விடுதலை புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிங்கக்கொடிகளை ஏந்தி காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு,  புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு எனக் கண்டித்துள்ளார். கொழும்பு சிவில் சமூகத்தின் முக்கிய பிரமுகரான ஸ்வஸ்திகா அருலிங்கம், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தனது கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை “தமிழ் சமூகத்திற்குள் புற்றுநோய்” எனவும் அவர் அழைத்தார். ஈழப்போராட்டம் தொடர்பாக சிங்களத்தில் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் பற்றி விவாதிக்க, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஆரம்பமாக மாகாண சபைகளுக்கு ஆதரவளிக்கும் நவ சமசமாஜக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை உருவாக்கிய சிறிதுங்க ஜயசூரியவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை (01) தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது இருந்தும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

தவறான முறையில் கனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு

தவறான முறையில் ஹனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு மருத்துவக் கவனயீனம் (medical negligence) என்றால் என்ன? அண்மித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை முன்னிறுத்திய ஓர் பகிர்வு. பாணதுறை வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கு மெனிக்னைஸ் என்ற ஒரு நோயிற்காக ஹனுலா மூலம் அன்ரிபயற்றிக் ஏற்ற முற்பட்டபொழுது அது நாளத்தில் சேர்க்கப்படாமல் நாடியில் சேர்க்கப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் இரத்தக் கட்டி ஏற்பட்டு அதன் விளைவின் காரணமாக குழந்தையின் மணிக்கட்டுப்பகுதியோடு கை அகற்றப்பட்டது. இவ்வழக்கில் விசேட நட்டமாக 3.5 மில்லியன் ரூபாவும் மருத்துவப் பதிப்பிற்காக 5 இலட்சமும் என மொத்தமாக 4 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கவேண்டும் என மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.

“பூஜா பூமி” எனும் பெயரில் காணி ஆக்கிரமிப்பு – வீடியோ

புல்மோட்டையில் மக்கள் விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் பிக்கு ஒருவர் துப்பரவு செய்ததால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. புல்மோட்டை, வீரந்தீவு எனப்படுகின்ற பகுதியில் காலாகாலமாக மக்கள் விவசாயம் செய்துவந்த விவசாய காணிகள் அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பனாமுரே திலகவங்ஷ நாயக்க தேரோவினால் டோசர் இயந்திரங்களைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (22) துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது. குறித்த காணி தமது விவசாய காணி என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அக்கானி பௌத்த விகாரைக்குரிய காணி என புத்த பிக்குவால் குறிப்பிடப்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் டோசர் இயந்திரத்தின்மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்தபோது இயந்திரத்தின் சாரதி டோசர் இயந்திரத்தை இயக்கியதால் பெண் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. சிலவருடகாலமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பூஜா பூமி எனும் பெயரில் தமிழ், முஸ்லீம் மக்களுடைய […]