vavuniya news

Home vavuniya news
vavuniya தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

புலிகளின் தங்கத்தை தேடி வவுனியாவில் தீவிர அகழ்வு நடவடிக்கை!

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில் இன்று (12) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இரண்டு பேக்ஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. […]

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் மரணம்

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே இன்று (12.10) மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். . இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கோர விபத்து!! இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பலி-ஆறு பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தையினை காணவில்லை – தவிக்கும் பிள்ளைகள்

வவுனியாவில் சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார். எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்) , 0774136383 (மனைவி) , 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி

வவுனியா புதுக்குளத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய குறித்த சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்ற சென்றபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி. டினோஜன் 9 வயது மற்றும் 7 வயது மாணவியும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் வி. டினோஜன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார். மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.