Accident News

Home Accident News
Accident News - விபத்து தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி !

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவ சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) இரவு 7.00 மணியளவில் தலாவ நகரின் மையப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தலாவ கரகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய டபிள்யூ. நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருந்த மாணவி எனவும் தெரியவந்துள்ளது. கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று தலாவ நகர சுற்றுவட்டத்தில் தெற்கிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பௌசரில் மோதியதும், குறித்த சிறுமி பௌசர் வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இருவரும் […]

விடுமுறைக்காக வீடு சென்றிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க (வயது- 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்காக நேற்று முன்தினம் வீடு சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் நேற்று (10) 11.00 மணியளவில் கலேவல தலகிரியாகம விகாரைக்கு எதிராக இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கோர விபத்து!! இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பலி-ஆறு பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தனியார் பேருந்துடன் மோதிய கொள்கலன் லொறி – விபத்தில் 22 பேர் காயம்

தனியார் பேருந்துடன் கொள்கலன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று அதிகாலை 05.00 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவிலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற அதேநேரம், எரிபொருள் பவுசரும் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன