Today Jaffna

Home Today Jaffna
Today Jaffna தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

யாழில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27.09.2023) புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர். தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம், எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். மேலும், யாழ். காரைநகர் – மருதபுரம் பகுதியில் இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்நேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த […]

யாழ் போதனா மருத்துவமனையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது. சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் கட்டளையிட்டது. பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட […]

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி! குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்!

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி […]

தாய்ப்பால் புரைக்கேறி 3 வயதுக் குழந்தை உயிரிழப்பு – வட்டுக்கோட்டையில் சோகம்!

தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செப்ரெம்பர் 24) வட்டுக்கோட்டை மேற்கில் நடந்துள்ளது. கி.ஹரிகரன் என்ற 3 வயது ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்றுக்காலை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு தாய் ஏணையில் இட்டுள்ளார். சிறிதுநேரத்தின் பின்னர் குழந்தையை அவதானித்தபோது குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை சங்கானை பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று அறிக்கையிட்டுள்ளனர். குழந்தையின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை வலி.கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். தாய்ப்பால் புரைக்கேறியே குழந்தை உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து ஹெலி ஏறி வந்தவர்களின் மனு யாழில் நிராகரிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்று மறுத்துள்ளது. கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி, மனுவை தாக்கல் செய்தனர். அவர்களின் மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மன்று நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.