முல்லைத்தீவு செய்திகள்

Home முல்லைத்தீவு செய்திகள்
முல்லைத்தீவு தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை – இராணுவத்தில் பணியாற்றும் நபர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்தினை செய்த மயில்குஞ்சன் குடியிருப்பு கைவேலியில் வசித்துவரும் 31 வயதுடைய இராணுவத்தில் பணியாற்றும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபாவனை அதிகரித்து காணப்படும் குறித்த கிராமத்தில் இராணுவத்தினரின் முகாமில் இருந்துஅகற்றப்படும் இருப்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள் அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது 31 வயதுடைய சந்தேகநபர் தடியால் குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரான இராணுவத்தில் பணியாற்றும் 31 வயதுடைய நபரை புதுக்குடியிருப்பு பொலழஸார் கைது செய்துள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு […]

முல்லையில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்! இருவர் கைது!! ஏனையோரிற்கு வலைவீச்சு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கழுத்தில் தாக்கினேன் அவள் நிலத்தில் விழுந்தாள்… மனைவியை அடித்துக் கொன்று குழி தோண்டி புதைத்த கணவனின் பதைபதைக்கும் வாக்குமூலம்

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணின் கணவன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பில் கணவன் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை ஏற்படும். சம்பவ தினத்தன்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். நான் மனைவியின் கழுத்தில் தாக்கிய போது அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை. தொட்டுப்பார்த்தபோது இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறம் மலசலகூடத்துக்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டதாக கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதான பெண்ணும், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதான ஆணும் திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந் […]

முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்

முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர் முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த த.கீதா எனும் 23 வயதுடைய குடும்ப பெண் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23வயதுடைய ஆணொருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த […]

கொக்குத்தொடுவாயில் வெடிப்புச் சம்பவம் – நால்வர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு கொக்குக்தொடுவாயில் இன்று (ஒக்ரோபர் 20) நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குள்ள வேம்படிச் சந்தியில் வெலிஓயா செல்லும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகியபோதே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் பணிக்குப் பயன்படுத்தும் மின்கலம் ஒன்றே வெடித்துள்ளது என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.