மலைநாட்டு செய்திகள்
Home மலைநாட்டு செய்திகள்
மலைநாட்டு செய்திகள் - தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்
200 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்த பஸ்; ஒருவர் பலி: 18 பேர் காயம்
பதுளை மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் இன்று (20) காலை 11.00 மணியளவில் பதுளை நகரின் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து மீகஹகிவுல அகிரிய நோக்கி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பஸ் பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தின்போது பஸ்ஸில் ஏறக்குறைய 40 பேர் இருந்ததாகவும் காயமடைந்தவர்களில் பெண்களும், சிறு குழந்தைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரும் காயமடைந்துள்ளதோடு, பஸ்சும் பலத்த சேதமடைந்திருப்பதாக பொலிஸார் […]
1/2 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 63 வயது தாத்தா
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோலன்ஸ் தோட்டத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனின் 1 1\2 வயதுடைய மகளை வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குழந்தையின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குழந்தை லுணுகலை தெய்கல்பெத்த கொடல்பெத்த பகுதியில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் சோலன்ஸ் பகுதியில் இருந்து குறித்த குழந்தையின் அப்பம்மா கொடல்பெத்த பகுதிக்கு சென்று குழந்தையை சோலன்ஸ் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் குறித்த குழந்தையை 63 வயதுடைய தனது கணவரிடம் விட்டு விட்டு கடமை நிமித்தம் அவர் வெளியில் சென்றுள்ளார். அந்நிலையில் குழந்தையின் தகப்பன் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக குறித்த வீட்டுக்கு சென்ற வேளை திடீரென வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்த்த போது தனது ஒன்றறை வயது மகளை தனது தகப்பன் வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் […]
வடமேல் மாகாண மலையகத் தமிழர்கள் நிரந்தர காணியுரிமை கோரி போராட்டம்
குருநாகல் மாவட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 20 பேர்ச் காணி “உறுதிப்பத்திரத்துடன்” வழங்கப்பட வேண்டும் என கோரி குருநாகல் மாவட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மாவத்தகமயைச் சேர்ந்த பல தோட்டங்களைச் சேர்ந்த மலையகத் தமிழர் சமூகத்தினர், ஒக்டோபர் 5ஆம் திகதியான நேற்று, வியாழக்கிழமை மாவத்தகமை, ரம்புக்கன வீதியில் உள்ள பிட்டியகந்த தோட்ட நுழைவாயிலில் போராட்டத்தை முன்னெடுத்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். “முகவரி எமது உரிமை”, “20 பேர்ச் காணி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் ஜீவரத்தினம் சுரேஷ் கூறுகையில், மலையகத்தில் உள்ள தமிழர்கள் அரச நிறுவனங்களில் தமிழில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொளவதாக குறிப்பிட்டார். கொடிய தொற்றுநோய் காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்த பெருமை மலையகத் தமிழ் சமூகத்திற்கே உரித்தாகும் எனவும் […]
குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டார். அதன் பின்னர் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம், செவ்வாய்க்கிழமை (03) மாலை கொண்டுச்செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆலய குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார். ஒஸ்பன் தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வந்த எஸ். ஜனநாதன் (வயது 16) சிறுவனே தோட்டத்தின் விநாயகர் ஆலய அறையில் செவ்வாய்க்கிழமை (03) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் பிரதான குருக்களுக்கு உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார். சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு
16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு
16 வயதான இளம் பூசகர், தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு மரணித்துள்ளார். கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்திலேயே அவரது சடலம் கிடக்கின்றது என்று நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர். ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். பிரதான பூசகர் கோவிலில் இல்லாத சமயத்திலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ள நோட்டன்பிரிஜ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.