Home video news 15 வயது சிறுமி மாயம்!! வீடியோ வாக்குமுலம் வழங்கிய 27 வயதான காதலன்

15 வயது சிறுமி மாயம்!! வீடியோ வாக்குமுலம் வழங்கிய 27 வயதான காதலன்

21

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நேற்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Previous articleநெடுந்தீவை உலுக்கிய கொலைச் சந்தேகநபர்!! ஆறு மாதங்கள் முடிந்தும் விளக்கமறியல் நீடிப்பு!
Next articleகணவரின் சுந்தரத்தை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி!