மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.