திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் சூட்சுமமாக இறங்கி விலையுயர்ந்த பொருட்களை திருடிய நபரை சம்பூர் பொலிஸார் நேற்று(25) மாலை கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து திருடப்பட்ட மூன்று கையடக்க தொலைபேசிகள், மடிக் கணினி ஒன்றினையும் பொலிஸார் மீட்டு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் -கூனித்துவு, நவரெட்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

