Home Jaffna News விளையாட்டு போட்டியில் இளம் பெண்களுக்கே சவால் விட்டு சிறப்பு பரிசு பெற்ற 75 வயது பாட்டி..

விளையாட்டு போட்டியில் இளம் பெண்களுக்கே சவால் விட்டு சிறப்பு பரிசு பெற்ற 75 வயது பாட்டி..

19

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் , பாடசாலை பழைய மாணவியான 75 வயதான புனிதவதி எனும் பாட்டியொருவரும் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த ஓட்ட போட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாட்டிக்கு பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். போட்டியில் கலந்து கொண்ட பாட்டிக்கு விசேட பரிசு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டியில் இளம் பெண்களுக்கே சவால் விட்டு சிறப்பு பரிசு பெற்ற 75 வயது பாட்டி.. - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleஇன்றைய ராசிபலன் – 07/03/2023, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleஅம்பாந்தோட்டை வீரகட்டிய பகுதியில் பதற்றம்! பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் மோதல்