Home battinews வாவியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

வாவியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

32

மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண்ணொருவர் சடலமாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று நீரில் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்று ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleமூன்று மாவீரர்களின் தாயார் உயிரிழப்பு (PHOTOS)
Next articleகைகள் இரண்டும் கடலில்: கற்களுக்குள் கத்தி