Home Uncategorized ரிஷப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

ரிஷப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

25
ரிஷப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

ரிஷப ராசி நேயர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு கடின உழைப்பு நிறைந்த ஆண்டாக இருக்கும் மேலும் மிதமான பலன்கள் கிடைக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் 9ம் வீட்டில் இருந்த்து மாறி 10ம் வீடான கர்ம ஸ்தானத்திற்கு செல்கிறார். நீங்கள் எதிர்பார்த்தது போலவே பெரிய வெற்றி காத்திருக்கிறது.

இது தவிர ஏப்ரல் 22ம் வரை 11ம் வீட்டில் குரு இருப்பதால் நிதி நிலையில் எந்தப் பிரச்சினையும் இருக்காது ஆனால் 12ம் வீட்டில் ராகு இருப்பதால் செலவுகள் பெருகிக்கொண்டே போகும்.

இந்த ஆண்டு மத்தியில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளால் நீங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகலாம் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில உடல் ரீதியான தொந்தரவுகள் வரலாம்.

இந்த ஆண்டின் இறுதில் சிறப்பான பலன்களை பெற முடியும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வளரும். ஆன்மீக பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த 2023ம் ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வருடம் நிச்சயம் அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்.

உங்கள் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. பணம் வரவு சொல்லும்படியாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைத்து விடும். தன்னம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் வெற்றி பெரும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு.

ரிஷப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 2023ஆம் ஆண்டு ராசி பலன்

சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். மனம் சந்தோஷமாக இருக்க பணம் நிறைய செலவு செய்ய வேண்டிவரும். புதியவர்கள் நண்பர்களாவர். உங்களுக்கு வந்த பல கஷ்டங்கள் கூட பனிப்போல விலகும். மற்றவர்கள் உங்கள் மீது சுமத்தும் பழிச் சொல்லை பொருட்படுத்த வேண்டாம்.

புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் பணியில் மட்டும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும். அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும்.

பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் இப்போது குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

தந்தை வழி உறவுகளால் ஒரு சில சிக்கல்கள் வரக்கூடும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. மறைமுக எதிரிகளால் ஒரு சில தொந்தரவு ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் கூட பகைமை பாராட்டுவர். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும்.

நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். பல நல்ல வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். இனி எல்லாம் நல்ல காலம் தான் என்கின்ற மன உறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும்.

தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் கூடுதல் பணியை சேர்த்து பார்க்க வேண்டிவரும். உத்யோகம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். உத்யோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். புது தொழில் யோகம் அமையும். தொழிலில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு பல அதிசயங்களை படைக்கும் ஆண்டாக இருக்கும்.

குறிப்பு : இந்த 2023ல் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleமேஷ ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleமிதுன ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023