Home social disorder யாழ் நல்லுார் வீதியில் உள்ள கிறீன் பார்க்கில் சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது முதலாளி கைது!!

யாழ் நல்லுார் வீதியில் உள்ள கிறீன் பார்க்கில் சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது முதலாளி கைது!!

20

யாழ்ப்பாணம் நல்லுார்ப் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த கிறீன்பார்க் எனும் பூங்காவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பூங்காவில் சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறைகளில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் உரிமையாளர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ் நகரப்பகுதி தனியார் கல்விநிலையங்களுக்கு வரும் மாணவிகளை வளைத்துக் கொண்டு வரும் காவாலிகளுக்கு இந்தப் பூங்காவே தொடர்ச்சியாக இடவசதி செய்து கொடுத்துள்ளது.

இந்தப் பூங்கா முதலாளியின் வளர்ப்பு மகனும் இளம் யுவதிகளை கொண்டு வந்து பாலியல் செயற்பாடுகளுக்கு விற்று காசு சம்பாதித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

Previous articleபுலிகளை விமர்சித்த சட்டத்தரணிக்கு யாழில் நேர்ந்த பரிதாபம்
Next articleஅனுராதபுரத்தில் 15 வயது சிறுமி கடத்தல் – ஒருவர் கைது