Home Jaffna News யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்

யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்

18

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள செல்வா திரையரங்குக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான பொலிஸ் குழு திருட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த, 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleகடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்! மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்
Next articleமுல்லையில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் எடுத்தவிபரீத முடிவு.!