யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியில் தனிமையில் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஒருவரை அம்மாணவி துணிகரமாக வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக வீதிகளில் செல்லும் மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலுள்ள புகையிரதப்பாதை, ஆத்திசூடி வீதி, குமாரசுவாமி வீதி, தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையான ஒழுங்கைகள், கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையான பகுதிகளில் சிலர் மாணவிகளை இலக்குவைத்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இது தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரிடம் முறையிட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இக்காணோளியையும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மாணவிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.