Home Accident News யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

22

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

விபத்து , அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த காரின் சாரதி இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous articleவிடுதி அறையில் மாமாவுடன் சேர்ந்து 14 வயது சிறுமியை பந்தாடிய காதலன்
Next articleஇளம் குடும்பஸ்தர் அடித்து கொலை; பெண் உட்பட மூவர் கைது.!