Home முல்லைத்தீவு செய்திகள் முல்லையில் 15 வயதான மாணவியை கடத்தி சென்ற தென்னிலங்கையர்

முல்லையில் 15 வயதான மாணவியை கடத்தி சென்ற தென்னிலங்கையர்

22

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை காணாமல்போன சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்த மாங்குளம் பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசி பலன் – 06.11.2023
Next articleஇது மட்டுமா வேறொன்றும் இல்லையா.. மாணவியிடம் வெள்ளைக்கோழி பற்றி விசாரித்த முல்லைத்தீவு ஆசிரியர்!