Home mannar news மன்னாரில் மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூர தாக்குதல்

மன்னாரில் மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூர தாக்குதல்

25

மன்னார் கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி காணொளி காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (23-10-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

சம்பவ தினமான திங்கட்கிழமை அதிகாலை விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் குறித்த மீனவர் சென்று அட்டையை பிடித்ததாக கூறி அவரை இருவர் பிடித்து கட்டி கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து காணொளி பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை என தெரியவருகின்றது.

Previous articleநீதிமன்றத்திற்குள் புகுந்து பெண் மீது கத்தி குத்து – சந்தேக நபர் தப்பியோட்டம்
Next articleபிக்குவை தாக்கி, 48 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்து தப்பிச்சென்ற நபர் கைது.