Home Local news மனைவி மறைந்திருக்குமிடத்தை அறிய கள்ளக்காதலனின் தாயாரை கொன்ற ஹொட்டல் உரிமையாளர் கைது!

மனைவி மறைந்திருக்குமிடத்தை அறிய கள்ளக்காதலனின் தாயாரை கொன்ற ஹொட்டல் உரிமையாளர் கைது!

30

சூரியவெவ பிரதேசத்தில் வசித்த பெண்ணொருவரை கடத்திச் சென்று படுகொலை செய்த வழக்கில் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் நேற்று இரவு சூரியவெவ பொலிஸ் நிலையத்திற்கு வந்து சட்டத்தரணி ஒருவருடன் சரணடைந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இந்த மூவரிடமும் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு அவர்களை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சூரியவெவ, விரியகம பகுதியில் வசித்து வந்த 58 வயதுடையபெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட தாயின் மகனுடன் ஹோட்டல் உரிமையாளரின் மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. வீட்டை விட்டு மனைவி தப்பிச் சென்றதையடுத்து, கள்ளக்காதலனின் இருப்பிடத்தை கண்டறிவதற்காக தாயாரை காரில் ஏற்றிச் சென்று தாக்கியதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு, நிறைபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த கும்பல்..! 3 பேர் கைது..
Next article15 வயது மாணவியை போதைக்கு அடிமையாக்கி தொடர்ந்து பாலியல் நாசம் செய்த வீட்டு உரிமையாளர் மகன்..!