Home CRIME NEWS பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

25
எஹலியகொட பொலிஸ் அதிகாரி பிரியங்க சில்வா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தலையின் வலது பக்கத்தில் ரத்தக் காயம் இருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயமாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

நாற்பத்திரண்டாவது வயதில் உயிரிழந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காலை அஹலியகொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Previous articleமனைவி தர்சிகாவை கொன்ற கணவன் சசிகரனுக்கு ஆயுள் தண்டனை
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 22.10.2023