Home battinews பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது தாக்குதல்!!

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது தாக்குதல்!!

24

செல்வாக்குள்ள நபரொருவர் பாடசாலைக்குள்  அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று 27.10.2023ம் திகதி மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் வகுப்பறைக்கற்றல் இடம்பெற்ற வேளை வகுப்பாசிரியர் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில் பிறதொரு மாணவனின் தந்தை வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.

குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் சக மாணவரின் முதலுதவியில் மயக்கம் தெளிந்து வீடு சென்ற போது உடல் சோர்வு மற்றும் நோவு காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.

குறித்த மாணவன் ஒன்பதாம் தரத்தில் கற்று வருபவர். தாக்குதலாளி மட்டக்களப்பில் நீதிமன்றில் பணி புரியும் உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகாணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிப்பு!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 28.10.2023