Home CRIME NEWS பயணிகளை இடைநடுவில் தவிக்கவிட்டு போதைப்பொருள் உட்கொள்ளச் சென்ற சாரதி

பயணிகளை இடைநடுவில் தவிக்கவிட்டு போதைப்பொருள் உட்கொள்ளச் சென்ற சாரதி

22

பூகொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தை தெல்கொட பகுதியில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு சாரதி போதைப்பொருள் உட்கொண்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பேருந்தின் ஓட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா மாவட்ட முகாமையாளர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாரதி போதைப்பொருள் உட்கொண்டதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் பயணிகளுடன் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டார்.

Previous articleபுதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை – இராணுவத்தில் பணியாற்றும் நபர் கைது
Next articleஇன்றைய ராசி பலன்கள் – 30.10.2023