Home CRIME NEWS நீதிமன்றத்திற்குள் புகுந்து பெண் மீது கத்தி குத்து – சந்தேக நபர் தப்பியோட்டம்

நீதிமன்றத்திற்குள் புகுந்து பெண் மீது கத்தி குத்து – சந்தேக நபர் தப்பியோட்டம்

27

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்ற பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தனது வீட்டில் இருந்து ஐந்து பவுண் தங்கப் நகைகளை காணவில்லை என தனது சகோதரன் சந்தேகிப்பதாக பெண் பாதுக்க பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார்.

வீட்டுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

Previous articleகள்ள உறவுக்கு ஆசைப்பட்டு காதலனுக்கு செய்த துரோகம்.. 25 கோடி சொத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்த நடிகை
Next articleமன்னாரில் மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூர தாக்குதல்