Home Astrology news துலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

துலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

16
துலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

துலாம் ராசி நேயர்களே, 2023 புத்தாண்டின் தொடக்கத்தில் இடம் வாங்கும் வாய்ப்பைப் பெறலாம் அல்லது உங்களுக்குப் பிடித்தமான வாகனம் வாங்குவதில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

உங்களின் செல்வம் பெருகும். சனி பகவான் ஜனவரி 17-ம் தேதி உங்களின் 4ம் வீட்டை விட்டு 5ம் வீட்டிற்கு பிரவேசிக்கிறார். இந்த நேரத்தில் காதல் உறவுகள் சோதிக்கப்படும். உங்கள் உறவில் நீங்கள் உண்மையாக இருந்தால் உங்கள் உறவு மிகவும் வலுவாக மாறும் இல்லையெனில் அதில் சிக்கல் வர வாய்ப்புகள் இருக்கும்.

நிதி நிலை அதிகரிக்கும். சனி பகவான் உங்களை மிகவும் கடினமாக உழைக்க வைப்பார். குரு பகவான் 6ம் வீட்டில் தங்கி உடல் நலக்குறைவைத் தருவார் ஆனால் ஏப்ரல் 22க்குப் பிறகு ஏழாம் வீட்டிற்குச் செல்லும்போது திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீர்ந்து கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில், உங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். 6ம் வீட்டிற்குச் செல்லும் பின்னர் நீங்கள் எதிரிகளை வெற்றி பெற முடியும். குரு 7ம் வீட்டில் தங்கினால் உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டும் வெற்றிகரமாக இருக்கும். இந்த 2023ம் ஆண்டில் அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும்.

இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டாக அமையும். இதுவரை இருந்து வந்த தொல்லைகள், கஷ்டங்கள், கடன்சுமைகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். நீங்கள் எப்போதும் சொன்ன சொல்லை தவற மாட்டீர்கள்.

துலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் புதிய வியாபாரத்தில் கிடைக்கும் இன்றைய ராசிபலன்கள் astology today Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை

வாய்ஜாலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். அதேநேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்க முடியும்.

உடன்பிறந்தோரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும்.

வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடியும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும்.

பூர்விக சொத்துக்களில் இருந்த சிக்கல் தீரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த புத்தாண்டு உங்களுக்கு கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும் ஆண்டாக அமையும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleகன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleவிருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023