Home trincomalee news திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

27

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , நபர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் , உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி உயிரிழந்த நபர் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதுண்டதில் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

WipeOut56 26 2023 055615.368000

WipeOut55 26 2023 055533.937000

WipeOut54 26 2023 055415.636000

Previous articleவீடொன்றினுள் சூட்சுமமாக இறங்கி கையடக்க தொலைபேசிகள், மடிக் கணினி திருடியவர் மாட்டினார்
Next articleகஜகேசரி ராஜயோகம்.. அக்டோபர் 28 .. அதிஸ்டமழையில் நனையவுள்ள 3 ராசிகள்!