Home trincomalee news திருமலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

திருமலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

27

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழ்.கோப்பாயில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன் தலைமறைவு!
Next articleகிணற்றில் வீழ்ந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான சோகம்