Home Local news சுகாதார துறையில் தரமற்ற உயிர்கொல்லிகள்?!! மேலும் ஒரு உயிர் பறிபோனது

சுகாதார துறையில் தரமற்ற உயிர்கொல்லிகள்?!! மேலும் ஒரு உயிர் பறிபோனது

488

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) விசாரணை நடத்தப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதுவரை குறித்த தடுப்பூசியை நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெட்டு காயத்திற்காக “Co-Amoxi-Clove” ( Augmentin ) எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோய் எதிர்ப்பு தடுப்பூசியை விடுதியில் உள்ள பல நோயாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் விசாரணை முடிவடையும் வரை இந்த தடுப்பூசியை கொழும்பு தேசிய வைத்தியசாலை பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நோயாளியின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

ONEPLUS Nord CE 3 Lite 5G Dual-SIM 128GB ROM + 8GB RAM (GSM only | No CDMA) Factory Unlocked 5G Smartphone (Pastel Lime) – International Version

Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 27.08.2023
Next articleநுரைச்சோலையில் பரபரப்பு சம்பவம்: இரத்தக்கறைகளுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here