Home gossips சிறுமி துஷ்பிரயோகம் ; சிறுவன் நிர்வாணமாக ஓட்டம்

சிறுமி துஷ்பிரயோகம் ; சிறுவன் நிர்வாணமாக ஓட்டம்

18

17 வயதுடைய சிறுவனால் , 15 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று குருநாகல் – கொஹிலகெதர பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (31) பதிவாகியுள்ளது.

சிறுமியின் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது குறித்த சிறுவன் பல முறை வீட்டிற்கு வந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தினத்தன்று சிறுமியின் பாட்டி மற்றும் அவரது சகோதரி சம்பவத்தை கண்டதையடுத்து, குறித்த சிறுவன் அணிந்திருந்த ஆடைகளையும் விட்டு நிர்வாணமாக தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியை குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் குறித்த சிறுமி, கசிப்பு மற்றும் பிற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅனுராதபுரத்தில் 15 வயது சிறுமி கடத்தல் – ஒருவர் கைது
Next articleஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்