Home Local news கொழும்பில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் மரணம்

18

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை சுவரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

27 வயது திருமணமான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Previous articleஇருட்டறையில் கட்டி வைத்து 10 மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
Next articleயாழ்.புறநகர் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம்! பொலிஸாருக்கு கசிந்த அதிர்ச்சி தகவல்கள்..