Home CRIME NEWS கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர்! சந்தேகநபர்கள் சிக்கினர்

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர்! சந்தேகநபர்கள் சிக்கினர்

22

பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கந்தானையை சேர்ந்த 22 வயதான கணவன் மற்றும் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 02 ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளராவார். குறித்த தொழிலதிபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி அந்த வீட்டிற்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் அவர் மீண்டும் திரும்பாததால் விசாரணையில் அவரது உடல் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமுல்லையில் இரண்டு சிறுவர்களை மோட்டுதனமாக போட்டு தாக்கிய பொலிசார்
Next articleஅமைச்சரின் முயற்சியால் வழிபாட்டுக்கு அனுமதி