Home மலைநாட்டு செய்திகள் காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிப்பு!

காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிப்பு!

25

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவில் இருந்து காணாமல்போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்காடு கிராமத்தில் இன்று மாலை 7 மணிக்கு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுவார்கள்.

பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (26) முதல் காணாமல் போயுள்ளனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடராஜா நிலூக்‌ஷன் – வயது 15, யோகராஜன் திவாகர் – வயது 13, ராஜா சன்தூர் – வயது 14 ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இங்கினர். இந்நிலையில் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Previous articleநண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 20 வயது யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்
Next articleபாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது தாக்குதல்!!