Home battinews இரவு கடுகதி ரயிலின் தேநீர்ச்சாலை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைப்பு : மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

இரவு கடுகதி ரயிலின் தேநீர்ச்சாலை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைப்பு : மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்பு!

19

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி  8.15 மணிக்கு புறப்படவிருந்த இரவு கடுகதி புகையிரதத்தின் தேநீர்ச்சாலை (கென்டீன்) சுகாதார பகுதியினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது பயணிகளுக்கு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் சுகாதார பகுதியினரால் மீட்கப்பட்டன.

அத்துடன் கரப்பான்பூச்சி மற்றும் எறும்புகள் மேய்ந்த நிலையிலான உணவுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் முன்னிலையில் கொண்டுசெல்லப்படவுள்ளன.

அத்துடன் புகையிரத தேநீர்ச்சாலை நடத்துநர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரவு கடுகதி ரயிலின் தேநீர்ச்சாலை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைப்பு : மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்பு! - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News இரவு கடுகதி ரயிலின் தேநீர்ச்சாலை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைப்பு : மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்பு! - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleஇன்றைய ராசிபலன் – 03/03/2023, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleகிளிநொச்சியில் நடு வீதியில் பாரவூர்தியை மறித்துச் சாரதி மீது கத்திக் குத்து!