Home Accident News இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் நால்வருக்கு காயம்

இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் நால்வருக்கு காயம்

21

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் இரண்டு மணியளவில் கினிகத்தேனை பேரகஹமுல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.​போ.ச பஸ், பேரகஹமுல்ல பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த போது, பின்னால் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கடவத்த டிப்போவுக்குரிய மற்றுமொரு இ.போ.ச பஸ்,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் சாரதி பஸ்ஸை கவனக்குறைவாக செலுத்தியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்ததுடன், சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

Previous articleயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இராணுவ வாகனம் மோதி கோர விபத்து, ஒருவர் பலி..
Next articleநான்கு இளைஞர்களால் சிறுமி துஷ்பிரயோகம்!! கைதானவர்கள் நிரபராதி என உறவுகள் ஆர்ப்பாட்டம்