Home Local news அம்பாந்தோட்டை வீரகட்டிய பகுதியில் பதற்றம்! பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் மோதல்

அம்பாந்தோட்டை வீரகட்டிய பகுதியில் பதற்றம்! பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் மோதல்

29

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதல் காரணமாக 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleவிளையாட்டு போட்டியில் இளம் பெண்களுக்கே சவால் விட்டு சிறப்பு பரிசு பெற்ற 75 வயது பாட்டி..
Next articleவவுனியாவில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலங்களாக மீட்பு! (வீடியோ)