Home Accident News அதிகாலையில் தீப்பற்றி எரிந்து சேதமான சொகுசு கார்

அதிகாலையில் தீப்பற்றி எரிந்து சேதமான சொகுசு கார்

19

காலி, பலபிட்டிய ஏத்கந்துர பகுதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

குறித்த சொகுசு மோட்டார் வாகனம் தொலைபேசி துாணில் மோதி விபத்துக்குள்ளானது.

பின்னர் மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அதன் சாரதி பொலிசாரிடம் தெரிவித்தார்.

அதிகாலையில் தீப்பற்றி எரிந்து சேதமான சொகுசு கார் - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது அதனுள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமாற்றி வழங்கப்பட்ட மருந்தால் பெண் ஒருவர் உயிரிழப்பு
Next articleநிர்வாணமாக சென்று வீட்டில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here